ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? - ஆம் ஆத்மி கட்சி இன்று ஆலோசனை


ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? - ஆம் ஆத்மி கட்சி இன்று ஆலோசனை
x

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆம் ஆத்மி கட்சி அறிவிக்க உள்ளது.

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். அவர்கள் மாநிலம் தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.

இந்நிலையில் வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் விவகார குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

இன்று நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆம் ஆத்மி கட்சி அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story