கலசா-பண்டூரி திட்டத்திற்கு இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி வழங்காதது ஏன்?; காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கேள்வி


கலசா-பண்டூரி திட்டத்திற்கு இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி வழங்காதது ஏன்?; காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கேள்வி
x

கலசா-பண்டூரி திட்டத்திற்கு இதுவரை சுற்றுச்சூழல் அனுமதி வழங்காதது ஏன்? என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ரூ.3 ஆயிரம் கோடி

காங்கிரசுடன் சேர்ந்து மகதாயி திட்ட கனவை நனவாக்குங்கள். மத்திய அரசின் அனுமதி பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரை முழுமையாக பயன்படுத்த முதல் மந்திரிசபை கூட்டத்தில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மகதாயி திட்டத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

குடிநீர், விவசாயம், மின்சார உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு உரிய மறுவாழ்வு வசதிகள் செய்து கொடுக்கப்படும். கலசா-பண்டூரி அணைக்கட்டுகளை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு மேம்படுத்துவோம். மகதாயி விவகாரத்தில் கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்திற்கு அனுமதி அளித்ததாக பா.ஜனதா தலைவர்கள் சொல்கிறார்கள். இது கர்நாடக மக்களை ஏமாற்றும் தந்திரம்.

அனுமதி மறுத்தது ஏன்?

கடந்த 2002-ம் ஆண்டு மகதாயி திட்டத்திற்கு அனுதி வழங்க அப்போது இருந்த மத்திய பா.ஜனதா அனுமதி மறுத்தது ஏன்?. கடந்த 8 ஆண்டுகளாக இந்த மகதாயி திட்டத்தை அமல்படுத்தாமல் இருந்தது ஏன்?. இன்று வரை இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி வழங்காதது ஏன்?. இதற்கு அனுமதி கோரி வரைவு திட்டத்தை பா.ஜனதா அரசு தாக்கல் செய்யாதது ஏன்?.

இதை எல்லாம் செய்யாமல், மகதாயி விவகாரத்தில் பா.ஜனதாவினர் வெற்றி விழாவை நடத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம். பெலகாவி, உப்பள்ளி-தார்வார் நகரங்களுக்கு குடிநீர் கிடைப்பதை காங்கிரஸ் உறுதி செய்யும். பா.ஜனதாவின் போலி வாக்குறுதிகளால் பெலகாவி, உப்பள்ளி-தார்வாா் நகர மக்களை முட்டாளாக்க முடியாது. ஆட்சி அதிகாரத்தில் இருந்து பா.ஜனதாவை அகற்ற இது சரியான நேரம்.

இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.


Next Story