கால்வாய் ஆக்கிரமிப்பில் பணக்காரர்களின் கட்டிடங்கள் அகற்றப்படாதது ஏன்?; காங்கிரஸ் கேள்வி
கால்வாய் ஆக்கிரமிப்பில் பணக்காரர்களின் கட்டிடங்கள் அகற்றப்படாதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தைரியம், திறன் இருந்தால் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை, காங்கிரசார் தடுக்கட்டும் என்று பேசினார். உங்களின் தைரியம், திறன் எல்லாம் ஏழைகள் மீது மட்டுமே காட்டுகிறீர்களே. கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் ஏழைகளின் வீடுகள் மட்டும் அகற்றப்படுகின்றன. பணக்கரர்களின் கட்டிடங்கள் அகற்றப்படாதது ஏன்?. ஐ.டி. நிறுவனம் ஒன்றை அகற்றாமல் அதிகாரிகள் திரும்ப வந்துள்ளனர். நில சர்வே அடையாளத்தை மாற்றியது ஏன்?. இதன் பின்னணியில் இருக்கும் சக்தி வாய்ந்த நபர் யார்?.
சித்தராமையா பற்றி சி.டி.ரவி எம்.எல்.ஏ. தரக்குறைவான கருத்துகளை கூறியிருந்தார். பெண்களை பாதுகாப்போம் என்று கூறும் பா.ஜனதாவினர் பெங்களூருவில் இருந்து பெலகாவி வரை பெண் பித்தர்கள், கற்பழிப்பில் ஈடுபடுபவர்கள் தான் உள்ளனர். பா.ஜனதாவுக்கு பலாத்கார ஜனதா கட்சி என்ற பெயரே பொருத்தமானது.
இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.