காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி... அதிர்ச்சி சம்பவம் !


காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி... அதிர்ச்சி சம்பவம் !
x

கோப்புப்படம் 

உத்தரபிரதேசத்தில் காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொலை பெண்ணை போலீசார் கைதுசெய்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பிஸ்ராக் கிராமத்தில் காதலனுடன் கூட்டு சேர்ந்து தனது கணவரைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

இந்த மாத தொடக்கத்தில் ஒரு பெண், தனது கணவரைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கானாமல் போன நபரை தேடி வந்தனர்.

அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தீவிர விசாரனையில், அந்த பெண் தனது காதலனுடன் தன் கணவரை கொலை செய்தது தெரியவந்தது. மேலும், வழக்கை திசை திருப்புவதற்காக போலீசில் புகார் அளித்ததகவும் அந்த பெண் தெரிவித்தார்

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், கணவரை கொன்ற மனைவியையும், அவரது காதலரையும் கைதுசெய்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story