ஓராண்டுக்கு முன் பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் 4 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து துபாரே முகாைம தேடி வந்த காட்டுயானை


ஓராண்டுக்கு முன் பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் 4 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து துபாரே முகாைம தேடி வந்த காட்டுயானை
x

ஓராண்டுக்கு முன் பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் ஓராண்டுக்குள் 4 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து துபாரே முகாமை காட்டுயானை ஒன்று தேடிவந்த சம்பவம் நடந்துள்ளது.

குடகு

ஓராண்டுக்கு முன் பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் ஓராண்டுக்குள் 4 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்து துபாரே முகாமை காட்டுயானை ஒன்று தேடிவந்த சம்பவம் நடந்துள்ளது.

துபாரே யானைகள் முகாம்

குடகு மாவட்டம் துபாரேவில் யானைகள் முகாம் உள்ளது. இ்ங்கு அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டுயானைகள் வனத்துறையினரால் பிடித்து கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கும்கி யானைகளும் உள்ளது. மைசூரு தசரா ஜம்பு சவாரியில் கலந்து கொள்ளும் யானைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துபாரே முகாமில் இருந்து பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்ட காட்டுயானை ஒன்று ஓராண்டுகள் 4 ஆயிரம் கி.மீ.தூரம் பயணித்து திரும்பி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குஷா யானை

அதாவது 2016-ம் ஆண்டு செட்டள்ளி பகுதியில் காட்டு யானை ஒன்று விளைநிலங்களை நாசப்படுத்தி தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இதையடுத்து பொதுமக்களின் புகாரின்பேரில் வனத்துறை அதிகாரிகள் 2016-ம் ஆண்டு அந்த யானையை பிடித்து துபாரே யானைகள் முகாமில் அடைத்தனர். அந்த யானைக்கு குஷா என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் துபாரே முகாமிலும் குஷா யானை அட்டகாசத்திலும், மதம் பிடித்தது போலவும் செயல்பட்டது. இதற்கிடையே காட்டுயானை முகாமில் இருந்து தப்பி வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.

வனத்துறையினர் காட்டுயானையை பிடித்து முகாமிற்கு மீண்டும் அழைத்து வந்தனர். ஆனாலும் குஷா யானை அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து வனத்துறையினர் குஷா யானையை வனப்பகுதியில் அதன்போக்கில் விட முடிவு செய்தனர். அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு குஷா யானையை துபாரேவில் இருந்து பந்திப்பூர் வனப்பகுதியில் விட்டனர். அங்கு குஷா யானை மற்ற காட்டுயானைகளுடன் உலாவி சுற்றிதிரிந்துள்ளது.

4 ஆயிரம் கி.மீ.தூரம்...

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குஷா யானை துபாரே முகாம் அருகே சுற்றிதிரிந்தது. அதனுடன் மேலும் 3 யானைகள் இருந்தது. அதாவது பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து குஷா, தன்னுடன் 3 யானைகளை அழைத்து கொண்டு நெடுந்தூரம் பயணிந்து துபாரே முகாமுக்கு வந்துள்ளது. இதனை பார்த்து வனத்துறையினர் ஆச்சரியமும், நெகிழ்ச்சியும் அடைந்தனர்.

இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில்:-

பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்ட நிலையில் ஓராண்டுக்குள் 4 ஆயிரம் கி.மீ.தூரம் பயணித்து குஷா யானை துபாரே யானைகள் முகாமிற்கு வந்துள்ளது. அதாவது வனப்பகுதியை குறுக்கு, மறுக்காக சுற்றி பயணித்து வந்துள்ளது. பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து கேரளா வழியாக துபாரே முகாமிற்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது குஷா, மற்ற 3 யானைகளுடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது. மேலும் குஷா உள்ளிட்ட 4 யானைகளும் அட்டகாசத்தில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story