இளநீரைக் குடிக்க 3 மணி நேரம் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானை - வைரல் காட்சிகள்


இளநீரைக் குடிக்க 3 மணி நேரம் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானை - வைரல் காட்சிகள்
x

கேரள மாநிலம் மூணாறில் இளநீரைக் குடிப்பதற்காக கிட்டத்தட்ட 3 மணி நேரம் காட்டு யானை போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்தது.

மூணாறு,

மூணாறு வட்டாரப் பகுதிகளில் அடிக்கடி படையப்பா என்று பொதுமக்களால் அழைக்கப்படும் காட்டு யானை பல்வேறு அட்டகாசங்களையும் செய்வது வழக்கம்.

அந்த வகையில் மாட்டு பெட்டி பகுதி வழியே பாரம் ஏற்றி வந்த ஆட்டோவைத் தாக்க முயற்சித்தது. ஓட்டுநர் நூலிழையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தொடர்ந்து வியாபாரி ஒருவர் வைத்திருந்த இளநீர்களை வியாபாரியை விரட்டி விட்டு விட்டு யானை குடித்துத் தீர்த்தது.

யானையைக் கண்டு அஞ்சி பொதுமக்கள் யாரும் பக்கத்தில் வரவில்லை. இது தான் சாக்கு என்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பப்பாளிப் பழங்களையும் படையப்பா தின்று தீர்த்தது.


Next Story