உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பேசியதை நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார் மம்தா பானர்ஜி சவால்


உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பேசியதை நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார் மம்தா பானர்ஜி சவால்
x

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பேசியதை நிரூபித்தால் ராஜினாமா செய்யத் தயார் என மேற்குவங்காள முதல் -மந்திரி மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

கொல்கத்தா

மேற்குவங்காள முதல் -மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிகாரம் என்பது தற்காலிகமானது தான், நாற்காலி வரலாம், போகலாம் ஆனால் ஜனநாயகம் என்றென்றும் தொடரும் என்பதை பாஜக புரிந்து கொள்ளவில்லை.

அரசியலமைப்பு என்றென்றும் தொடரும், சில திருத்தங்கள் இருக்கலாம்;ஆனால் இந்த அரசியலமைப்பை புல்டோசர் மூலம் தகர்க்க முடியாது.

பா.ஜ.க. தற்போது ஆட்சியில் இருக்கிறது, அதனால் தான் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள். வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறாது. 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வால் 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெற முடியாது.

தனது கட்சியின் பெயர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசாகவே இருக்கும்.

திரிணாமுல் காங்கிரஸ் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்ததை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை தொடர்பு கொண்டு பேசியதை நிரூபித்தால் ராஜினாமா செய்வேன் என கூறினார்.

(எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்ததை தொடர்ந்து மத்திய மந்திரி அமித் ஷாவை மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறி இருந்தார்.)


Next Story