மத்திய பிரதேசம்: தொந்தரவு கொடுத்த நாய்; உரிமையாளர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காவலாளி


மத்திய பிரதேசம்: தொந்தரவு கொடுத்த நாய்; உரிமையாளர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காவலாளி
x

அது தொடர்பாக அண்டை வீட்டுக்காரர்கள் இருவர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தூர்,

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு வங்கியில் காவலாளியாக பணிபுரிபவர் ராஜ்பால் ரஜாவத்.

இவர் தான் வசிக்கும் கிருஷ்ணாபாக் காலனியில் நேற்று முன்தினம் இரவு தனது வளர்ப்புநாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது அந்த நாய்க்கும், ராஜ்பாலின் அண்டை வீட்டுக்காரரின் நாய்க்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அது தொடர்பாக அண்டை வீட்டுக்காரர்கள் இருவர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதையடுத்து ராஜ்பால் விறுவிறுவென்று தனது வீட்டு மாடிக்கு சென்றார். அங்கிருந்து, பணிக்காக தனக்கு வழக்கப்பட்டுள்ள துப்பாக்கியால், கீழே நின்ற அண்டை வீட்டுக்காரர்களை பார்த்து சரமாரியாக சுட்டார்.

அதில் குண்டு காயம் அடைந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் காயம் அடைந்த 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

வங்கி காவலாளி ராஜ்பால் ரஜாவத்தை கைது செய்த போலீ சார், அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

அண்டை வீட்டுக்காரர்கள் இடையே முன்பகை ஏதும் இல்லை என்றும், நாய்ச்சண்டையில் ஏற்பட்ட பிரச்சினைதான் இரு உயிர்களைப் பறித்துவிட்டது என்றும் போலீசார் கூறினர்.


Next Story