ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் நகை, பணம் கொள்ளை - பெண் உள்பட 4 பேர் கைது


ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் நகை, பணம் கொள்ளை - பெண் உள்பட 4 பேர் கைது
x

ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் 1.40 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டில் பணியாற்றி வரும் நீதிபதி கிரேட்டர் கைலாஸ் ஏரியா - 1 பகுதியில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இதனிடையே, கடந்த மே 1-ம் தேதி நீதிபதி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார். பின்னர், மே 24-ம் தேதி வீட்டிற்க்கு வந்துவிட்டு உடனடியாக மீண்டும் வெளியூர் சென்றுள்ளார். தொடர்ந்து மே 30-ம் தேதி வெளியூரில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது, வீட்டின் பின் வாசல் கதவு திறக்கப்பட்டு வீட்டில் இருந்த 1.40 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதை நீதிபதி குடும்பத்தினர் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து நீதிபதி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி வீட்டில் கொள்ளையடித்த பெண் உள்பட 4 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் மீட்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்டவர்களில் 2 பேர் பீகாரை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சஞ்சய் திவாரி (34), அஜெய் ராவத் (36), சர்துதன் குமார் (39), அஞ்சுலா திவாரி (39) ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story