செல்லப்பிராணி நாய்க்குட்டியை 3-வது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசிக்கொன்ற கொடூர பெண்...!


செல்லப்பிராணி நாய்க்குட்டியை 3-வது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசிக்கொன்ற கொடூர பெண்...!
x
தினத்தந்தி 22 May 2022 7:54 PM IST (Updated: 22 May 2022 7:55 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து கிழே தூக்கி வீசப்பட்ட செல்லப்பிராணி நாய்க்குட்டி உயிரிழந்தது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் ஆஷா லும்பா என்ற பெண் வசித்து வருகிறார். அவர் வசித்து வரும் வீட்டிற்கு அருகே வசித்து வந்த நபர் செல்லப்பிராணி நாய்க்குட்டியை வளர்த்து வந்துள்ளார். நாய்க்குட்டிக்கு குடியிருப்பு பகுதியிலேயே உணவு கொடுப்பதை ஆஷா லும்பா விரும்பவில்லை. இதனால், ஆஷாவுக்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் அவ்வப்போது சண்டை நிலவி வந்துள்ளது.

இந்நிலையில், ஆஷா லும்பா தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்த அந்த செல்லப்பிராணி நாய்க்குட்டியை குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து நேற்று ஆஷா கீழே தூக்கி வீசினார். 3-வது மாடியில் இருந்து கிழே வீசப்பட்ட செல்லப்பிராணி நாய்க்குட்டி துடிக்கத்துடிக்க உயிரிழந்தது.

இது குறித்து, ஆஷா மீது அண்டை வீட்டார் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து ஆஷா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story