படித்து இருக்கிறார் என்பதற்காக பெண்ணை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்த முடியாது- மும்பை ஐகோர்ட்டு


படித்து இருக்கிறார் என்பதற்காக பெண்ணை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்த முடியாது- மும்பை ஐகோர்ட்டு
x

படித்து இருக்கிறார் என்பதற்காக பெண்ணை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்த முடியாது என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

கணவர் மனு

புனேயை சேர்ந்த ஒருவரை, பிரிந்து சென்ற மனைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுக்க குடும்ப நல கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர், தனது மனைவி பட்டதாரி, அவருக்கு நிலையான வருவாய் கிடைக்கிறது என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பாரதி தாங்ரே அடங்கிய அமர்வு முன் நடந்தது.

கட்டாயப்படுத்த முடியாது

அப்போது நீதிபதி, " வீட்டு தேவைக்கு பெண்ணும் பங்களிக்க வேண்டும் என்பதை நமது சமூகம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. வேலை பார்ப்பது பெண்ணின் விருப்பம். வேலைக்கு செல்லுமாறு பெண்ணை கட்டாயப்படுத்த முடியாது. பட்டதாரி என்பதற்காக பெண் வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூற முடியாது. இன்று நான் இந்த கோர்ட்டில் நீதிபதியாக இருக்கிறேன். நாளை நான் வீட்டில் உட்காரலாம். அப்போது நீங்கள், நான் படித்து இருக்கிறேன் வீட்டில் சும்மா இருக்க கூடாது என சொல்வீர்களா? " என்றார்.

பின்னர் மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


Next Story