கணவர் இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


கணவர் இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

புத்தூரில் கணவர் இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா பனாஜே அருகே கொண்டல்கானா கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணநாயகா. இவரது மனைவி வசந்தி (வயது 42). இந்த நிலையில் கிருஷ்ணநாயகா கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

கணவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த வசந்தி, கதறி அழுதார். இதையடுத்து அவர் மனமுடைந்து காணப்பட்டார். யாரிடமும் சரியாக பேசவில்லை. உணவும் சரியாக சாப்பிடவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் வசந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் உப்பினங்கடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் தற்கொலை செய்துகொண்ட வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் இறந்த துக்கத்தில் வசந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து உப்பினங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story