ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தண்டவாளத்திற்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி பெண் உடல்நசுங்கி பலி


ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தண்டவாளத்திற்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி பெண் உடல்நசுங்கி பலி
x

ரெயிலில் ஏற முயன்றபோது தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய பெண் உடல்நசுங்கி உயிரிழந்தார்.

மும்பை,

பீகார் மாநிலம் நாளந்தாவை சேர்ந்தவர் காயத்ரி (வயது 45). இவரது கணவர் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள வங்கியில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இதனிடையே, கணவருடன் பெங்களூருவில் வசித்துவந்த காயத்ரி தனது 2 மகள்களை அழைத்துக்கொண்டு செவ்வாய்கிழமை ரெயிலில் பீகார் புறப்பட்டு சென்றார்.

பெங்களூரு - தனப்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் காயத்ரி தனது மகள்களுடன் பீகார் புறப்பட்டார். ரெயில் மராட்டிய மாநிலம் நாக்பூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்றது. அப்போது காயத்ரி ரெயில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

இதை தொடர்ந்து ரெயில் நாக்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. அப்போது, நடைமேடையில் நின்றுகொண்டிருந்த காயத்ரி ரெயில் புறப்பட்டதால் வேகமாக ஓடிச்சென்று ரெயிலுக்குள் ஏற முயற்சித்தார்.

அப்போது நிலைதடுமாறிய காயத்ரி தண்டவாளத்திற்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார். இதில், வேகமாக சென்ற ரெயில் அவர் மீது ஏறியது. இந்த கொடூர சம்பவத்தில் காயத்ரி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த காயத்ரியின் உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story