திடீர் பிரசவ வலி: ஓடும் பேருந்தில் ஆண் குழந்தை பெற்றெடுத்த பெண்
மராட்டிய மாநிலத்தில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
மராட்டியம்,
மகாராஷ்டிய மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். பேருந்தானது கல்யாணில் உள்ள வராப் கிராமத்திற்கு அருகே சென்றபோது அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவ வலி ஏற்பட்ட சிறிது நேரத்தில் அவர் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
உடனடியாக அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு, தாயும் குழந்தையும் மருத்துவ பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது தாயும், சேயும் நலமுடன் உள்ளனர்.
Related Tags :
Next Story