வளர்ப்பு நாய் கடித்து குதறியதில் வேலைக்கு சென்று கொண்டிருந்த இளம்பெண் படுகாயம்! நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
அரியானா மாநிலம் குருகிராமில் பிட்புல் நாய் தாக்கியதில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
புதுடெல்லி,
அரியானா மாநிலம் குருகிராமில் பிட்புல் நாய் தாக்கியதில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
பல நாடுகளில் பிட்புல் நாய்களை வளர்க்க தடை உள்ளது.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியை ஒட்டிய குருகிராமின் சிவில் லைன்ஸ் பகுதியில் காலை 7 மணியளவில் பணிக்கு சென்று கொண்டிருந்த முன்னி என்ற இளம்பெண்ணை பிட்புல் வகை வளர்ப்பு நாய் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனே அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டி அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றினர். அந்த பெண் ஆபத்தான நிலையில் இருந்ததால் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இன்று காலையில் வழக்கம் போல அந்த நாய் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்தது. அப்போதுஇ அந்த வழியாக நடந்து சென்ற பெண் மீது பாய்ந்து தாக்கியது.
இதனிடையே, நாய் உரிமையாளர் மீது ஐபிசி 289, 338 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த மாதம், லக்னோவில் உள்ள கைசர்பாக் பகுதியில் 82 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் அவரது மகனின் செல்லப்பிராணியான பிட்புல் நாயால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
நாய்களால் தொடர்ந்து மனிதர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. நாய்களை வளர்ப்போர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.