'பீர்பூரில்' மதுப்பழக்கத்தை கைவிட மறுத்த கணவனை கொலை செய்த மனைவி...!
மதுப்பழக்கத்தை கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் பீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வினய் ராஜ் (வயது 27). இவரது மனைவி ராதா.
வினய் ராஜிக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. மதுப்பழக்கத்தை கைவிடும்படி ராதா தொடர்ந்து அறிவுறுத்தி வந்துள்ளார். ஆனால், மனைவியின் பேச்சை கேட்காமல் ராஜ் தொடர்ந்து மதுக்குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், மதுப்பழக்கத்தை கைவிடும்படி ராதா கடந்த சனிக்கிழமை இரவு ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ராதா வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு தனது கணவர் ராஜை சரமாரியாக குத்திக்கொலை செய்தார்.
பின்னர், தனது கணவரை யாரோ கொலை செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் கணவரை ராதாவே கொலை செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, கணவரை கொலை செய்து நாடகமாடிய ராதாவை போலீசார் கைது செய்தனர்.