நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை செங்கலால் அடித்துக்கொன்ற மனைவி...!


நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை செங்கலால் அடித்துக்கொன்ற மனைவி...!
x

மனைவியின் நடத்தை மீது பப்புவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் நவடா நதுவா கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பப்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

இதனிடையே, தனது மனைவி வெறொரு நபருடன் தொடர்பில் உள்ளார் என்று பப்பு நினைத்துள்ளார். இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்தபோதும் பப்பு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து சண்டையிட்டு வந்தார்.

இந்நிலையில், நடத்தையில் சந்தேகப்பட்டு கடந்த சனிக்கிழமை இரவு பப்பு தனது மனைவியிடம் மீண்டும் சண்டையிட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் தன் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை பப்புவின் மனைவி செங்கலால் கடுமையாக தாக்கினார். மனைவி தாக்கியதில் படுகாயமடைந்த பப்புவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பப்புவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இத சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story