குடும்பத்தை விட்டு பிரிந்து வேறு நபருடன் வாழ்ந்துவந்த பெண் கொலை - கணவன், மகன்கள் வெறிச்செயல்


குடும்பத்தை விட்டு பிரிந்து வேறு நபருடன் வாழ்ந்துவந்த பெண் கொலை - கணவன், மகன்கள் வெறிச்செயல்
x
தினத்தந்தி 9 Jun 2022 4:39 AM IST (Updated: 9 Jun 2022 4:40 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தை விட்டு பிரிந்து வேறு நபருடன் வசித்து வந்த பெண்ணை கணவன் மற்றும் மகன்கள் இணைந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணுடன் வசித்து வந்த நபரும் கொல்லப்பட்டார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜங்க்பூர் மாவட்டம் தாஹர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஓம்பால் குஷ்வாலா. இவரது மனைவி மம்தா (40). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இதற்கிடையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஓம்பாலை விட்டு மம்தா பிரிந்துள்ளார். பின்னர், அதேகிராமத்தை சேர்ந்த ராமன்பால் என்ற நபருடன் மம்தா வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், குடும்பத்தை விட்டு பிரிந்து அதேகிராமத்தை சேர்ந்த நபருடன் மம்தா வாழ்ந்து வந்து வருவதை அவரது கணவர் ஓம்பாலும், மகன்களும் விரும்பவில்லை. இதனால், ஓம்பால் தனது மகன்களுடன் இணைந்து தனது மனைவி மம்தா மற்றும் அவருடன் வாழ்ந்து வந்த ராமன்பாலை கொல்ல திட்டமிட்டனர்.

அதன்படி, மம்தாவையும் அவருடன் வசித்து வந்த ராமன்பாலையும் பெண்ணின் கணவர் ஓம்பால், அவரது மகன்கள் இணைந்து நேற்று கட்டையால் அடித்து கொலை செய்தனர். மமதாவையும், ராமன்பாலையும் கொலை செய்த பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story