கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் கோர்ட்டில் தீக்குளிக்க முயற்சி


கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் கோர்ட்டில் தீக்குளிக்க முயற்சி
x

ஜாமினில் வெளியே வந்த குற்றவாளி தனது நண்பனுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெர்ஹம்பூர் பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவரது கணவர் ஐதராபாத்தில் வேலை செய்துவருகிறார்.

அவர் வேலை செய்து கிடைக்கும் பணத்தை பெர்ஹம்பூரில் உள்ள ஒரு நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைப்பது வழக்கம். அந்த நபர் அந்த பெண்ணிடம் கொண்டு சென்று கொடுப்பார்.

இதனிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த பெண்ணை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

அதன்பின்னர், ஜாமினில் வெளியே வந்த குற்றவாளி தனது நண்பனுடன் சேர்ந்து கடந்த நவம்பர் 14-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதற்கு குற்றவாளியின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார்.

இது தொடர்பாக, அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் மீண்டும் கைது செய்தனர். ஆனால், புகார் கொடுத்தும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மற்றொரு நபரை போலீசார் கைது செய்யவில்லை.

இந்நிலையில், தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் மற்றொருவரை கைது செய்யவேண்டுமென பல முறை போலீசாரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், விரக்தியடைந்த பாதிக்கப்பட்ட பெண் பெர்ஹம்பூர் கோர்ட்டு வளாகத்தில் நேற்று மண்ணெண்ணெய் தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர்.

பின்னர், தன்னை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளில் எஞ்சிய நபரையும் கைது செய்யும்படி போலீசில் அப்பெண் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story