பெண், கத்தியால் குத்திக் கொலை


பெண், கத்தியால் குத்திக் கொலை
x

உப்பள்ளியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உப்பள்ளி:-

தகராறு

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா கோலிவாடா கிராமத்தை சேர்ந்தவர் உடசப்பா (வயது 35). இவரது மனைவி சாரதா (28). உடசப்பா, மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. ்இதனால் அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கத்தை கைவிடும்படி கண்டித்த சாரதாவையும் அவர் அடித்து உதைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போதும் சாரதா, அவரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

கொலை

அப்போது, குடிபோதையில் இருந்த உடசப்பா, சாரதாவை சரமாரியாக அடித்து உதைத்தார். ேமலும் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சாரதாவை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சாரதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உடசப்பா அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் உப்பள்ளி புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கொலையான சாரதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த உடசப்பாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story