தொழிற்சாலையில் இரவு 7 மணிக்கு மேல் பெண்களை பணி செய்ய கட்டாயப்படுத்த கூடாது. - உ.பி. அரசு அதிரடி உத்தரவு


தொழிற்சாலையில் இரவு 7 மணிக்கு மேல் பெண்களை பணி செய்ய கட்டாயப்படுத்த கூடாது. - உ.பி. அரசு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 29 May 2022 12:14 AM IST (Updated: 29 May 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தொழிற்சாலைகளில் இரவு 7 மணிக்கு மேல் பெண்களை பணி செய்ய கட்டாயப்படுத்த கூடாது என உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கருதி கடுமையான கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களில் பெண் தொழிலாளர்கள் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிய வேண்டும் என்றால் எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண் தொழிலாளி பணி செய்ய மறுத்தால் வேலையில் இருந்து நீக்ககூடாது என உத்தரபிரதேச அரசு தொிவித்துள்ளது.

மேலும், இரவு நேரத்தில் பணிபுரியும் போது குறைந்தபட்சம் 4 பெண் தொழிலாளர்களுக்கு மிகாமல் பணியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும், இரவில் பணிபுரியும் பெண் தொழிலாளருக்கு இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதுமான பாதுகாப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என தொிவித்துள்ளது.


Next Story