மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் நீண்ட பயணம் பாஜக ஆட்சியில் முழுமை பெறுகிறது - அமித்ஷா பேச்சு
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் நீண்ட பயணம் பாஜக ஆட்சியில் முழுமை பெறுகிறது என்று மக்களவையில் அமித்ஷா கூறினார்.
புதுடெல்லி,
மக்களவையில் மகளிர் ஒடஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
மகளிருக்கு அதிகாரமளிக்கும் மசோதாவாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் நீண்ட பயணம் பாஜக ஆட்சியில் முழுமை பெறுகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவில்லை.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சில கட்சிகள் அரசியலாக பார்க்கின்றன. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக பெண்களுக்கு ஒரு இடம் வழங்கப்படும். குஜராத்தில் மகளிருக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இடஒதுக்கீடு வழங்கியது.
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவது இது ஐந்தாவது முயற்சியாகும். தேவகவுடா முதல் மன்மோகன் சிங் வரை நான்கு முறை இந்த மசோதா கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.