குஜராத் தொங்கு பாலம் விபத்து: கைதானவர்களுக்கு ஆதரவாக வாதாட மாட்டோம் - வழக்கறிஞர்கள் அமைப்பு முடிவு!


குஜராத் தொங்கு பாலம் விபத்து: கைதானவர்களுக்கு ஆதரவாக வாதாட மாட்டோம் - வழக்கறிஞர்கள் அமைப்பு முடிவு!
x

இந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேர் சார்பாக ஆஜராகப் போவதில்லை என்று வழக்கறிஞர்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

ராஜ்கோட்,

குஜராத் மாநிலம் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்ததில் 135 பேர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேர் சார்பாக ஆஜராகப் போவதில்லை என்று குஜராத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

மார்ச் மாதத்திலிருந்து புதுப்பிப்பதற்காக மூடப்பட்டிருந்த மோர்பியில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு இடிந்து விழுந்து பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.குஜராத்தைச் சேர்ந்த ஓரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அதன் உயர்மட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

ஓரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக்பாய் படேல் கூறுகையில், "இந்த புதுப்பிக்கப்பட்ட பாலம் குறைந்தது எட்டு முதல் பத்து ஆண்டுகள் வரை நீடிக்கும்" என்று கூறியிருந்தார். ஆனால் விபத்து நடந்த பின்னர் அவரை காண இயலவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டார் என்று உள்ளூர்வாசிகள் கூறினர்.

இந்நிலையில், மோர்பி மற்றும் ராஜ்கோட் பார் அசோசியேஷன் நேற்று காலை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, இவ்விவகாரம் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட 9 பேருக்கு ஆதரவாக யாரும் வாதாடக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story