சிறையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வேலை - தினசரி 90 ரூபாய் சம்பளம்


சிறையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வேலை - தினசரி 90 ரூபாய் சம்பளம்
x

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு முதல் 3 மாதங்கள் ஊதியமில்லாமல் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவால் கடந்த 1987 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் கடந்த 19 ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சித்து கிளார்க்காக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவருக்கு முதல் 3 மாதங்களுக்கு ஊதியமில்லாமல் பயிற்சி வழங்கப்படும் என்றும், பின்னர் தினசரி 90 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story