சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது - பிரதமர் மோடி


சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது - பிரதமர் மோடி
x

Image Courtesy : ANI 

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது

புதுடெல்லி,

உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த மார்ச் 2022-ல் "மண் காப்போம் இயக்கத்தைத்" தொடங்கிய ஜக்கி வாசுதேவ், மோட்டார் சைக்கிளில், 27நாடுகளில் 100நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று இந்த பயணத்தின் 75-வது நாள் ஆகும்.

இந்நிலையில் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள "மண் காப்போம் இயக்கம்" குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் "மண் காப்போம் இயக்கம்" குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், " சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் பல திட்டங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய செய்தியை கொண்டு செல்கின்றன. ஸ்வச் பாரத் மிஷன், நமாய் கங்கை என சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் முயற்சிகள் பலதரப்பட்டவை.

முன்பெல்லாம் நமது விவசாயிகளுக்கு மண்ணின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு இல்லை. இப்பிரச்சினையை போக்க, நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்குவதற்கான மாபெரும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், கங்கை நதி வழித்தடத்தில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என அறிவித்துள்ளோம்" எனகூறினார்.


Next Story