கவுகாத்தியில் முகாமிட்டு உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு உத்தவ்தாக்கரே அழைப்பு


கவுகாத்தியில் முகாமிட்டு உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு உத்தவ்தாக்கரே அழைப்பு
x

கவுகாத்தியில் முகாமிட்டு உள்ள அதிருப்தி எம்.எல்.ஏகக்ளுக்கு உத்தவ்தாக்கரே ஆன்லைன் மூலம் பேசி மும்பை வரும் படி அழைப்பு விடுத்து உள்ளார்

மும்பை,

ஆளும் கட்சியான மகாவிகாஸ் கூட்டணியில் பங்கேற்று உள்ள சிவசனோ கட்சிக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தனது அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் போர்க்கொடி தூக்கி கவுகாத்தில் முகாமிட்டு உள்ளார். இதனால் கட்சியில் பெரும்பான்மையை இழந்ததால் மாநிலத்தில் கூட்டணி அரசு கவிழும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே கவுகாத்தியில் முகாமிட்டு உள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் இறுதியாக முதல் மந்திரி உத்தவ்தாக்கரே பேசினார்.

இது பற்றி அவர் பேசுகையில் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ள குடும்ப உறுப்பினர்களான சிவசேனா கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பை வரும் படி அழைப்பு விடுத்து உள்ளார். தன்னை நேரில் சந்தித்து தன்னுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்துவோம். விவகாரம் தொடர்பாக அனைவரும் கலந்து ஆலோசிப்போம். நான் நிச்சயமாக நம்புகிறேன் இதற்கு கட்டாயமாக ஒரு முடிவு கிடைக்கும். உடனடியாக மும்பைக்கு புறப்பட்டு தன்னை சந்திக்கும்படி அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு இறுதி கட்ட முயற்சியாக அழைப்பு விடுத்துள்ளார்.


Next Story