'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை பார்த்த யோகி ஆதித்யநாத்படக்குழுவினருக்கு பாராட்டு


தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்த்த யோகி ஆதித்யநாத்படக்குழுவினருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 13 May 2023 4:45 AM IST (Updated: 13 May 2023 4:45 AM IST)
t-max-icont-min-icon

சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

லக்னோ,

சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த திரைப்படத்தை மேற்கு வங்காளத்தில் திரையிட மாநில அரசு தடை விதித்து உள்ளது.

இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று இந்த திரைப்படத்தை பார்த்தார். அவருக்காக சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது.

துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா, மாநில பா.ஜனதா தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி மற்றும் மாநில மந்திரிகளும் யோகி ஆதித்யநாத்துடன் இந்த திரைப்படத்தை பார்த்தனர். அத்துடன் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகளும் இந்த திரைப்படத்தை பார்த்தனர். இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

திரைப்படத்தை பார்த்த பின் யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டர் தளத்தில், 'எனது மந்திரிசபை சகாக்களுடன் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தேன். இந்த திரைப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்' என குறிப்பிட்டு உள்ளார்.


Next Story