வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு; காதலியுடன் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை


வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு; காதலியுடன் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
x

ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டனர்

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் இட்டாவாஹ் மாவட்டம் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் விமல் குமார் (25 வயது). இவரும் அதேபகுதியை சேர்ந்த மான்சி (வயது 22) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இதனிடையே, விமல் குமாருக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் விமல் குமாருக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், விமல் குமார் அவரது காதலி மான்சியுடன் நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். காதல் ஜோடி இருவரும் ராம்நகர் பகுதியில் உள்ள ரெயில் நிலைய பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு வேகமாக வந்த ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் காதல் ஜோடிகளான விமல் குமார் - மான்சி பாய்ந்துள்ளனர்.

எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்த காதல் ஜோடிகள் விமல் - மான்சி தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமர் குமார், மான்சி வீட்டை இல்லாததை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் தேடியுள்ளனர். அப்போது, ராம்நகர் பகுதியில் தண்டவாளம் அருகே காதல் ஜோடிகள் ரெயிலில் குத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் வாலிபர் தனது காதலியுடன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story