பத்ராவதியில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது


பத்ராவதியில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பத்ராவதியில் திருட்டு வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி நியூடவுன் போலீசார் ஜோடிகட்டே பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் போலீசாரை பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், ஜோடிகட்டே பகுதியை சேர்ந்த பிரஜ்வல் (வயது 20) என்பதும், இவர் பத்ராவதி டவுனில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் தற்போதும் திருட திட்டமிட்டு சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பிரஜ்வலை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து ரூ.34 ஆயிரம் ரொக்கம், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நியூ டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story