இளைஞர் காங்கிரசுக்கு 86 புதிய நிர்வாகிகள் நியமனம்


இளைஞர் காங்கிரசுக்கு 86 புதிய நிர்வாகிகள் நியமனம்
x

கோப்புப்படம்

இளைஞர் காங்கிரசுக்கு 86 புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

இளைஞர் காங்கிரஸ் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 86 புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பொதுச்செயலாளர்களும் அடங்குவர்.

புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒப்புதல் அளித்திருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். புதிய நிர்வாகிகள் உடனடியாக பணியை தொடங்குமாறு சோனியா கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இதுதவிர, இளைஞர் காங்கிரசில் 18 செயலாளர்கள் மாற்றப்படவில்லை. 49 புதிய செயலாளர்களும், 9 இணை செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊடகம், சமூக வலைத்தளம், வெளியுறவு, சட்டம் உள்பட 10 துறைகளின் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story