தூதரக அதிகாரி பாலியல் தொல்லை இந்தியப் பெண்ணின் குற்றச்சாட்டுகளை பரிசீலிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு


தூதரக அதிகாரி பாலியல் தொல்லை இந்தியப் பெண்ணின் குற்றச்சாட்டுகளை பரிசீலிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு
x

பாகிஸ்தான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தவறான நடத்தையை பொறுத்து கொள்ளமாட்டோம் " என்று கூறப்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

பஞ்சாபில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரும் ஒரு துறையின் தலைவரும் பாகிஸ்தான் தூதரகத்தில் ஆன்லைன் விசாவுக்கு பதிவு செய்து இருந்தார்.

மார்ச் 2022 அந்த பெண் தூதரகத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு உள்ள அதிகாரி ஒருவர் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஒருவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது குறித்து அந்த பெண் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு நேர்ந்த துயரத்தை விவரித்து நீதி கேட்டு முறையிட்டு உள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் கூறியதாவது:-

விசா மறுக்கப்பட்டதால் தூதரகத்தை விட்டு வெளியேறும் போது, என்னை ஆசிப் என்று அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு அதிகாரி உதவ முன்வந்தார்.

என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று விசா அதிகாரி வரும் வரை காத்திருக்கச் சொன்னார்கள். அப்போதுதான் ஆசிப் என்னிடம் எனது தொழில், திருமண நிலை, பாலியல் ஆசைகள் மற்றும் அவற்றை நிறைவேற்ற என்ன செய்கிறீர்கள் என கேட்டார்.

நான் வெளியேற விரும்பினேன் ஆனால் இன்னும் 20 நிமிடங்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன் மேலும் "அதிகாரி" அவரது வக்கிரப் பேச்சுகளைத் தொடர்ந்தார்.எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. என் மதத்தைப் பற்றியும் என்னிடம் கேட்டார்," என்று அவர் சம்பவத்தை விவரித்தார்.

இந்தியப் பெண்ணிடம் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் அநாகரீகமாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. "தவறான நடத்தையை பொறுத்து கொள்ளமாட்டோம் " என்று கூறப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மும்தாஸ் சஹ்ரா பலோச் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த சம்பவம் குறித்து மும்தாஜ் ஜஹ்ரா பலோச் கூறுகையில், "எங்கள் தூதரகங்களுக்கு வருகை தரும் நபர்களிடம் தவறான நடத்தை மற்றும் தவறாக நடத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.

"நாங்கள் இந்த வழக்கை ஆராயும்போது, அதன் நேரம் மற்றும் அது எழுப்பப்பட்ட விதம் குறித்து நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். அனைத்து பொதுமக்களின் குறைகளுக்கும் தீர்வு காண வலுவான வழிமுறைகள் உள்ளன.

அனைத்து விசா மற்றும் தூதரக விண்ணப்பதாரர்களிடமும் சரியான நடத்தைக்கு பாகிஸ்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.


Next Story