பெங்களூரு அருகே தொழிலாளி கொலையில் கள்ளக்காதலி உள்பட 2 பேர் கைது


பெங்களூரு அருகே தொழிலாளி கொலையில் கள்ளக்காதலி உள்பட 2 பேர் கைது
x

பெங்களூரு அருகே தொழிலாளி கொலையில் கள்ளக்காதலி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

தொழிலாளி கொலை

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா கலலுகட்டே கிராமத்தில் உள்ள மேம்பாலத்தின் அடியில் கடந்த ஜூலை மாதம் 2-ந் தேதி தலை நசுங்கியபடி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீஸ் விசாரணையில், அவர் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி தொட்டலிங்கப்பா (வயது 45) என்பது தெரிந்தது.

அதே நேரத்தில் தனது கணவரை காணவில்லை என்று கடந்த மாதம் 9-ந் தேதி துமகூரு மாவட்டம் ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் எல்லம்மா புகார் அளித்திருந்தார். இதையடு்த்து, நெலமங்களா போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மா்மநபர்களை தேடிவந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில், தொட்டலிங்கப்பாவை கொலை செய்ததாக ஜெயநகரை சேர்ந்த லட்சுமி (35), அவரது கள்ளக்காதலன் வெங்கடேஷ் (40) ஆகிய 2 பேரையும் நெலமங்களா போலீசார் கைது செய்துள்ளனர்.

தொட்டலிங்கப்பாவுக்கும், லட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. லட்சுமிக்கு அவர் ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்திருந்தார். அத்துடன் லட்சுமிக்கு தொட்டலிங்கப்பாவை தவிர வெங்கடேஷ், மற்றொரு நபருடனும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விவகாரங்கள் பற்றி கேட்டதால் ஆத்திரமடைந்த லட்சுமி தனது கள்ளக்காதலன் வெங்கடேசுடன் சேர்ந்து தொட்டலிங்கப்பா தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு, உடலை நெலமங்களா அருகே வீசியது தெரிந்தது. கைதான 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story