மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 9 ஆயிரம் மரங்கள் வெட்டி அழிப்பு


மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 9 ஆயிரம் மரங்கள் வெட்டி அழிப்பு
x

பெங்களூருவில், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக 9 ஆயிரம் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது சில வழித்தடங்களில் ரெயில்கள் இயங்கி வருகின்றன. இன்னும் சில வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக நகரில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டன. இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக பெங்களூருவில் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு இருந்தார்.

அதற்கு பதில் அளித்துள்ள தகவல் அறியும் உரிமை அதிகாரிகள் 2008-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 3,368 மரங்களும், 2021-ம் ஆண்டில் பேஸ்2, பேஸ் 2ஏ, 2பி பணிகளுக்காக வனத்துறை அனுமதியுடன் 2021-ம் ஆண்டு 1,712 மரங்களும், மாநகராட்சி அனுமதியுடன் 4,074 மரங்களும் வெட்டப்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர். அதாவது மெட்ரோ பணிகளுக்காக 9,154 மரங்கள் வெட்டப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது.


Next Story