ஸ்ரீசைலத்தில் கர்நாடக அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்


ஸ்ரீசைலத்தில் கர்நாடக அரசு பஸ்  டிரைவர் மீது தாக்குதல்
x

ஸ்ரீசைலத்தில் கர்நாடக அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பெங்களூரு:

ஆந்திராவில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீசைலம் வழிபாட்டு தலத்திற்கு கர்நாடகத்தின் பல மாவட்டங்களில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று பாகல்கோட்டையில் இருந்து ஒரு அரசு பஸ் ஸ்ரீசைலத்திற்கு சென்றது. அந்த பஸ்சை டிரைவர் பசவராஜ் பீராதார் ஓட்டிச்சென்றார். பஸ் அங்கு சென்றதும் அங்குள்ள பஸ் நிலையம் அருகே பஸ்சை நிறுத்திய டிரைவர் பசவராஜ், கோவில் கட்டிடத்தில் படுத்து தூங்கினார்.

அப்போது அவரை 12 பேர் கும்பல் முகத்தில் மிளகாய் பொடியை தூவி சரமாரியாக தாக்கியது. அவர்கள் எதற்காக தாக்கினார்கள் என்று தெரியவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்தால் பசவராஜ் பலத்த காயம் அடைந்தார். இதுபற்றி ஸ்ரீசைலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Next Story