தொழிலாளர் சங்கத்தில் சேர மறுத்த வாலிபர் மீது தாக்குதல்


தொழிலாளர் சங்கத்தில் சேர மறுத்த வாலிபர் மீது தாக்குதல்
x

பெங்களூருவில் தொழிலாளர் சங்கத்தில் சேர மறுத்த வாலிபர் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித் சிங் (வயது 33). இவர் ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். பெங்களூரு கெங்கேரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். இந்த நிலையில் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்கள் சங்கத்தில் சேரும்படி ரஞ்சித் சிங்கை அவரது நண்பர்களான மங்கூரு யாதவ், மிருதஞ்சனேயா, வீரபத்ரப்பா, பப்பு யாதவ், ஹிரா லால், ஜெய் சிங்லால், லால் சந்த் யாதவ், ஆசாத் ஆகியோர் வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது.

ஆனால் தொழிலாளர் சங்கத்தில் சேர ரஞ்சித் சிங் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்டதகராறில் ரஞ்சித் சிங்கை, மேற்கண்ட 8 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித் சிங் கெங்கேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்த புகாரின்பேரில் கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story