கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர் பாபுராவ் சின்சனசூர் மனு தாக்கல்


கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தல்:  பா.ஜனதா வேட்பாளர் பாபுராவ் சின்சனசூர் மனு தாக்கல்
x

கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் பாபுராவ் சின்சனசூர் மனுதாக்கல் செய்தார்.

பெங்களூரு:

கர்நாடக மேல்-சபையில் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.எம்.இப்ராகிம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மேல்-சபையில் ஒரு இடம் காலியாக இருக்கிறது. அந்த ஒரு இடத்திற்கு வருகிற 11-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும்.

இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பாபுராவ் சின்சனசூர் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் தேர்தல் அதிகாரியான சட்டசபை செயலாளர் விசாலாட்சியிடம் மனு தாக்கல் செய்தார். அப்போது மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. அதனால் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி எம்.எல்.சி.யாக தேர்ந்து எடுக்கப்படுவது உறுதி. மனுக்கள் பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. பாபுராவ் சின்சனசூர் சித்தராமையா மந்திரிசபையில் மந்திரியாக பணியாற்றியவர். காங்கிரசில் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story