தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் தம்பதி சாவு: 20 பேர் படுகாயம்


தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் தம்பதி சாவு: 20 பேர் படுகாயம்
x

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் தம்பதி உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

கோலார் தங்கயவல்:

ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து சுமார் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் பெங்களூரு நோக்கி நேற்று அதிகாலை வந்தது. கோலார் மாவட்டம் முல்பாகல் அருகே வெங்கடகிரி பகுதியில் வந்தபோது டிரைவின் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் தனியார் பஸ், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளில் சிக்கி பஸ்சில் பயணித்த குண்டூருவை சேர்ந்த ஷேக் ஷரீப் (வயது 52) மற்றும் இவரது மனைவி ஷேக் ஷமியுன்னிஷா (47) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோயினர். மேலும் பஸ்சில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோலார் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஜாலப்பா தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து முல்பாகல் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.


Next Story