ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்படுவதால் முஸ்லிம் மாணவிகள் 5 பேர் மாற்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்


ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்படுவதால்  முஸ்லிம் மாணவிகள் 5 பேர் மாற்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்
x

கல்லூரிக்கு ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்படுவதால் முஸ்லிம் மாணவிகள் 5 பேர் மாற்று சான்றிதழை திரும்ப தரும்படி விண்ணப்பித்துள்ளனர்.

மங்களூரு:

கர்நாடக ஹிஜாப் விவகாரம் கடந்த பிப்ரவரி மாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஹிஜாப் அணிந்து வகுப்புக்குள் அனுமதிக்க கோரி முஸ்லிம் மாணவிகள் 6 பேர் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமர்வு, மத அடையாள ஆடைகள் அணிய தடை விதித்து கர்நாடக அரசு அறிவித்தது செல்லும் என கூறி தீர்ப்பளித்தது. இந்த நிலையில் விடுமுறைக்கு பின்னர் கல்லூரிகள் திறந்தபோது, மங்களூருவில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கு எதிரா மாணவிகள் சிலர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் மங்களூரு கல்லூரியை சேர்ந்த 6 முஸ்லிம் மாணவிகள் கல்லூரியில், மாற்று சான்றிதழ் (டி.சி.) கேட்டு விண்ணபித்துள்ளனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டதாவது:-

போராட்டம் நடத்திய 40-க்கு மேற்பட்ட மாணவிகள், ஹிஜாப்பை கழற்றிவிட்டு, வகுப்புகளுக்கு வருவதாக கூறிவிட்டனர். ஆனால் 6 முஸ்லிம் மாணவிகள் மட்டும் ஹிஜாப் அணிய அனுமதி கோரி நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதற்கு நாங்கள் மறுத்ேதாம். இந்த நிலையில் அந்த 6 மாணவிகள் வேறு கல்லூரியில் சேருவதற்காக, மாற்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து கல்லூரி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.


Next Story