கன்னட திரைப்பட தயாரிப்பாளர் உள்பட 4 பேர் கைது


கன்னட திரைப்பட தயாரிப்பாளர் உள்பட 4 பேர் கைது
x

வீட்டுமனை மோசடி வழக்கில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு:

குறைந்த விலைக்கு வீட்டுமனை

கன்னட திரை உலகில் தயாரிப்பாளராக இருந்து வருபவர் மஞ்சுநாத். இவர் கன்னட நகைச்சுவை நடிகரான கோமலை வைத்து லோடு என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தார். ஆனால் அந்த படம் திரைக்கு வரவே இல்லை என்று கூறப்படுகிறது. இதன்மூலம் மஞ்சுநாத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து மஞ்சுநாத் திரைப்படம் எதுவும் தயாரிக்கவில்லை என்று தெரிகிறது.

இதன்பின்னர் பெங்களூரு ராஜாஜிநகரில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தை நடத்தி வந்த மஞ்சுநாத், குறைந்த விலைக்கு வீட்டு மனை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து உள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த புஷ்பகுமார் என்பவர் மஞ்சுநாத்திடம் வீட்டுமனை வாங்க முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்து இருந்தார். பின்னர் வீட்டு மனைக்காக ஆவணங்களை மஞ்சுநாத்திடம், புஷ்பகுமார் கொடுத்து இருந்தார்.

4 பேர் கைது

ஆனால் வீட்டுமனை ஆவணங்களை கொடுக்காமல் மஞ்சுநாத் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதனால் ரூ.2 லட்சம் தரும்படி புஷ்பகுமார் கேட்டு உள்ளார். ஆனால் பணம் கொடுக்கவும் மஞ்சுநாத் மறுத்து உள்ளார். இதையடுத்து மஞ்சுநாத் மீது ராஜாஜிநகர் போலீஸ் நிலையத்தில் புஷ்பகுமார் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்த போது குறைந்த விலைக்கு வீட்டுமனை வழங்குவதாக கூறி மஞ்சுநாத் உள்பட 4 பேர் கூட்டு சேர்ந்து பணத்தை வாங்கி மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மஞ்சுநாத், அவரது நண்பர்களான சிவக்குமார், கோபால், சந்திரசேகர் ஆகியோரை ராஜாஜிநகர் போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story