கியாஸ் சிலிண்டர் வெடித்து ஆதரவற்றோர் இல்ல உரிமையாளர், மனைவி பலி


கியாஸ் சிலிண்டர் வெடித்து ஆதரவற்றோர் இல்ல உரிமையாளர், மனைவி பலி
x

வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து படுகாயம் அடைந்த சம்பவத்தில் ஆதரவற்றோர் இல்ல உரிமையாளர் பலியாகி இருந்தார். இந்த நிலையில் அவரது மனைவியும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் அவர்களை நம்பி இருந்த 32 ஆதரவற்றோர் பரிதவித்து வருகிறார்கள்.

குடகு:-

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா அம்பேத்கர் படாவனே பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ்(வயது 55). இவரது மனைவி ரூபா(45). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் குஷால்நகர் தாலுகா 7-வது ஒசக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தொண்டூரு கிராமத்தில் 32 ஆதரவற்றோரை பாதுகாத்து வந்தார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இவர்கள் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டில் கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் ரமேசும், அவரது மனைவி ரூபாவும் பலத்த காயம் அடைந்தனர்.

சிகிச்சை பலனின்றி பலி

இந்த சம்பவத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு

சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டார். ரூபா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ரூபாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் அவர்களது குடும்பத்தினரும், அவர்களை நம்பி இருந்த 32 ஆதரவற்றவர்களும் சோகத்தில் மூழ்கினர்.

நேற்று ரமேஷ் மற்றும் ரூபாவின் உடல்கள் அவர்கள் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்ல வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் மந்தர் கவுடா எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டு அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்களது

உடல்கள், அவர்களுடைய மகள்கள், பெற்றோர் மற்றும் 32 ஆதரவற்றோர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.

பரிதவிப்பு

இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்த மந்தர் கவுடா எம்.எல்.ஏ., 'ரமேஷ்-ரூபா தம்பதி நடத்தி வந்த ஆதரவற்றோர் இல்லத்தை அரசு எடுத்து நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும் இதுபற்றி மாவட்ட பொறுப்பு மந்திரி போசராஜுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அவரும் உதவிகள்

செய்திட தயாராக உள்ளார்' என்றார்.

ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வந்த தம்பதி இறந்ததால் தற்போது அவர்களை நம்பி இருந்த அவர்களது மகள்கள் 3 பேர், 32 ஆதரவற்றோர் ஆகியோர் பரிதவித்து வருகிறார்கள்.


Next Story