அமர்நாத்திற்கு யாத்திரை சென்று சிக்கி உள்ள கன்னடர்களை பாதுகாப்பாக மீட்டுவர அரசு நடவடிக்கை; மந்திரி அசோக் பேட்டி


அமர்நாத்திற்கு யாத்திரை சென்று சிக்கி உள்ள கன்னடர்களை பாதுகாப்பாக மீட்டுவர அரசு நடவடிக்கை; மந்திரி அசோக் பேட்டி
x

அமர்நாத்திற்கு யாத்திரை சென்று சிக்கி உள்ள கன்னடர்களை பாதுகாப்பாக மீட்டுவர அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி அசோக் கூறியுள்ளார்.

பெங்களூரு:

வருவாய்த்துறை மந்திரி அசோக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

காஷ்மீரில் உள்ள அமர்நாத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பெருக்கு காரணமாக, அங்கு புனித யாத்திரை சென்றிருந்த கன்னடர்கள் சிக்கி தவிக்கின்றனர். அமர்நாத்தில் சிக்கி இருக்கும் கன்னடர்களை பாதுகாப்பாக மீட்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதற்காக மத்திய அரசுடன், கர்நாடக அரசு தொடர்பில் இருந்து வருகிறது.

ராமநகர், மைசூரு, பெங்களூரு, சிக்பள்ளாப்பூர், சிவமொக்கா உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் புனித யாத்திரை சென்றிருந்தனர். அவர்களில் பாதிபேர் யாத்திரையை முடித்துவிட்டு, கர்நாடகத்திற்கு திரும்பும் போது சிக்கி உள்ளனர்.உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டு பேசுபவா்களுக்கும், உதவி கேட்பவர்களுக்கும் தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story