சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்த தந்தைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்- ஹாசன் கோர்ட்டு அதிரடி உத்தரவு


சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்த தந்தைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்- ஹாசன் கோர்ட்டு அதிரடி உத்தரவு
x

சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்த அவரது தந்தைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து ஹாசன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஹாசன்:

மோட்டார் சைக்கிள் ஓட்டிய சிறுவன்

ஹாசன் மாவட்டம் பேளூரை சேர்ந்தவர் குமார். இவருக்கு 16 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் குமார், 16 வயதான தனது மகனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி குமாரின் மகன் கொல்லஹள்ளி வனப்பகுதி அருகே அம்மனபேடரஹள்ளி பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வேகமாக சென்றுள்ளார்.இதனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்துள்ளனர். மேலும் அவர்கள் தங்கள் செல்போனில் மோட்டார் சைக்கிளின் பதிவெண்ணை பதிவு செய்துகொண்டனர்.

ரூ.20 ஆயிரம் அபராதம்

இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஓட்டுநர் உரிமம் இன்றி சிறுவன் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் ஹாசன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்த அவரது தந்தை குமாருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் 18 வயது நிரம்பாத சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுக்கக்கூடாது என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.


Next Story