ஹாசனில், துப்பாக்கி முனையில் மிரட்டி-பா.ஜனதா பிரமுகரின் தாயிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி


ஹாசனில், துப்பாக்கி முனையில் மிரட்டி-பா.ஜனதா பிரமுகரின் தாயிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி
x

ஹாசனில் , துப்பாக்கி முனையில் மிரட்டி , பா.ஜனதா பிரமுகரின் தாயிடம் தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஹாசன்:

ஹாசன் டவுன் கே.ஆர்.புரம் படாவனே 5-வது கிராசில் டி.டிபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். பா.ஜனதா பிரமுகரான இவர், வீட்டில் தனது தாய் ரங்கம்மா என்பவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரங்கம்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு, 2 பேர் வந்து ஹாலிங் பெல் அடித்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு ரங்கம்மாவும், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது 2 பேரும், ரங்கம்மாவிடம் உங்களது மகனுக்கு பார்சல் வந்துள்ளது என்று பேச்சுகொடுத்துள்ளனர்.

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த 2 பேரும், திடீரென்று துப்பாக்கியை எடுத்து ரங்கம்மாவின் தலையில் வைத்து மிரட்டி கழுத்தில் கிடந்த 100 கிராம் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதை எதிர்பாராத ரங்கம்மா அதிர்ந்து அடைந்து தங்கசங்கிலியை இருக்கமாக பிடித்து கொண்டு, மர்ம நபர்கள் 2 பேரையும் கீழே பிடித்து தள்ளினார். இதில் அவர்கள் நிலை தடுமாறியதும் ரங்கம்மா வெளியே ஓடி வந்தார். பின்னர் சத்தம் போட்டு திருடன்... என்று கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும், மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

தகவல் அறிந்த ஹாசன் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்று விசாரணை நடத்தினர். இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story