கர்நாடகத்தில், வீடுகள்தோறும் தேசியகொடியை ஏற்ற பொதுமக்கள் முன்வரவேண்டும்-மந்திரி சுதாகர் வேண்டுகோள்


கர்நாடகத்தில், வீடுகள்தோறும் தேசியகொடியை ஏற்ற பொதுமக்கள் முன்வரவேண்டும்-மந்திரி சுதாகர் வேண்டுகோள்
x

கர்நாடகத்தில், வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற பொதுமக்கள் முன்வரவேண்டும் என்று மந்திரி சுதாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோலார் தங்கயவல்:

75-வது சுதந்திர தின பவள விழாவை கொண்டாடுவது குறித்து நேற்று சிக்பள்ளாப்பூர் நகரில் உள்ள சர் எம்.விஸ்வேஸ்வரய்யா விளையாட்டு அரங்கில் செய்து வரும் ஏற்பாடுகள் குறித்து மந்திரி சுதாகர் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நாட்டில், நரேந்திரமோடி பிரதமராக இருக்கும்போது 75-வது சுந்திர தின விழாவை கொண்டாடுவது பெருமையாக உள்ளது. இது மறக்க முடியாத ஒன்று.

எனவே நமது நாட்டின் தேச பக்தியை வெளிப்படுத்தும் விதமாக மத்திய அரசின் வேண்டுகோளின்படி மாநிலம் முழுவதும் 12-ந் தேதி முதல் 15-ம் தேதி வரை 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியகொடி ஏற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும். சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக சிக்பள்ளாப்பூர் நகரில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 'நமது தேசியகொடி ஊர்வலம்' 3 நாட்களுக்கு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story