ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 13-ந் தேதி கர்நாடகம் வருகை


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 13-ந் தேதி கர்நாடகம் வருகை
x

2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 13-ந் தேதி கர்நாடகம் வருகை தர உள்ளார்.

பெங்களூரு:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகிற 13-ந் தேதி கர்நாடகம் வருகிறார். அன்றைய தினம் காலை தனி விமானம் மூலம் பெங்களூரு வரும் அவர், இங்குள்ள ராணுவ பள்ளி வெள்ளி விழாவில் கலந்து கொள்கிறார். அதன் பிறகு அவர் அன்று இரவு கவர்னர் மாளிகையில் தங்குகிறார்.

மறுநாள் அதாவது 14-ந் தேதி கனகபுரா ரோட்டில் உள்ள வைகுண்டமலையில் திருப்பதி திருமலை கோவில் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்கான் கோவிலை திறந்து வைக்கிறார். அதன் பிறகு அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


Next Story