ரெயில் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: தென்மேற்கு ரெயில்வே தகவல்


ரெயில் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டம்:  தென்மேற்கு ரெயில்வே தகவல்
x

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ரெயில் நிலையங்களில் மரக்கன்றுகள் நடப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பெங்களூருவில் உள்ள 6 முக்கிய ரெயில் நிலைய வளாகங்களில் செடி, கொடிகள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து பசுமை விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கே.எஸ்.ஆர். பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம், சர் எஸ்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையம், பையப்பனஹள்ளி ரெயில் நிலையம், ஹெப்பால், சன்னசந்திரா, யஸ்வந்தபுரம் ஆகிய 6 ரெயில் நிலையங்களில் உள்ள காலி இடங்கள் மற்றும் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் பூச்செடிகள், மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பங்கேற்க தனியார் தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள் உள்பட பல்வேறு அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story