கோலார் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்-போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் உத்தரவு


கோலார் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்-போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் உத்தரவு
x

ராஜஸ்தான் ரெசார்ட்டில் சூதாடியதாக கைது செய்யப்பட்ட கோலார் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கோலார் தங்கவயல்:

சூதாடியதாக கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ரெசார்ட்டில் அந்த மாநில போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 84 பேரை போலீசார் கைது செய்தனர். ஆபாச நடனமாடிய 13 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் கர்நாடகத்தை சேர்ந்த 7 பேரும் அடங்குவர். அவர்கள் கோலார் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஆஞ்சனப்பா, அரசு பள்ளி ஆசிரியர் ரமேஷ், வியாபாரி சுதாகர், கோலார் நகரசபை உறுப்பினர்கள் சதீஸ், சபரீஷ் உள்பட 7 பேர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஜெய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரெசார்ட்டில் இருந்து போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

பணி இடைநீக்கம்

இந்த நிலையில் ராஜஸ்தான் ரெசார்ட்டில் சூதாடியதாக கைது செய்யப்பட்ட கோலார் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஆஞ்சனப்பாவை பணி இடைநீக்கம் செய்து கோலார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கோலாரில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறுகையில், ராஜஸ்தானில் உள்ள ரெசார்ட்டில் சூதாடியதாக கோலார் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஆஞ்சனப்பா உள்பட கர்நாடகத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஆஞ்சனப்பா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

1 More update

Next Story