குற்றப்பத்திரிகையில் விசாரணை அதிகாரி திருத்தம் செய்யலாம்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


குற்றப்பத்திரிகையில் விசாரணை அதிகாரி திருத்தம் செய்யலாம்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

எந்த குற்ற வழக்கிலும் தீர்ப்புக்கு முன்பாக குற்றப்பத்திரிகையில் விசாரணை அதிகாரி திருத்தம் செய்யலாம் என கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பெங்களூரு:

கோலார் மாவட்டம் மாலூரை சேர்ந்த ஒருவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கில், கோர்ட்டில் விசாரணை தொடங்கிய பின்பு குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்யப்பட்டு இருந்தது. இதனை எதிர்த்து மாலூரை சேர்ந்த அந்த நபர், கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதுபோல், அந்த மனு மீதான விசாரணை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், விசாரணை தொடங்கிய பின்பு குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதற்கு எதிராக வாதிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து, நீதிபதி நாகபிரசன்னா அதிரடி தீர்ப்பு கூறியுள்ளார். எந்த குற்ற வழக்கமாக இருந்தாலும், அந்த வழக்கின் தீர்ப்பு கோா்ட்டில் கூறப்படுவதற்கு முன்பாக, குற்றப்பத்திரிகையில் விசாரணை அதிகாரி திருத்தம் செய்யலாம். கோர்ட்டில் விசாரணை நடக்கும் சந்தர்ப்பத்திலும் வழக்குக்கு தேவையான ஆவணங்கள், தகவல்களை சேர்க்க வேண்டும் என்றால், சேர்க்கலாம். இதற்கான அதிகாரம் விசாரணைக்கு அதிகாரிக்கு உள்ளது என்று நீதிபதி நாகபிரசன்னா உத்தரவிட்டுள்ளார். மேலும் மனுதாரர் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதி நாகபிரசன்னா உத்தரவிட்டுள்ளார்.


Next Story