100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்

100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
x
தினத்தந்தி 26 Jun 2023 8:00 PM GMT (Updated: 26 Jun 2023 8:00 PM GMT)

100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

மும்பை,

100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

எத்தனால்

மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைவரை சமீபத்தில் சந்தித்தேன். எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே தயாரிப்போம் என்று அவர் என்னிடம் கூறினார். முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் புதிய வாகனங்களை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம்.

விலை மலிவு

பஜாஜ், டி.வி.எஸ். மற்றும் ஹீரோ ஸ்கூட்டர்கள் 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும். டொயோட்டா நிறுவனத்தின் கேம்ரி காரை வருகிற ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்த உள்ளோம். இது 100 சதவீதம் எத்தனாலில் இயங்குவதுடன், 40 சதவீத மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும். முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்குவதாலும், அதில் இருந்து மின்சாரம் உற்பத்தி ஆகிறது என்பதாலும், பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் எத்தனால் விலை மிக மலிவாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story