பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த மின்சார ரெயிலில் அத்துமீறி ஏறிய 15 பயணிகள் கைது


பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த மின்சார ரெயிலில் அத்துமீறி ஏறிய 15 பயணிகள் கைது
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அம்பர்நாத் ரெயில் நிலையம் அருகே பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த மின்சார ரெயிலில் அத்துமீறி ஏறிய 15 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

தானே,

அம்பர்நாத் ரெயில் நிலையம் அருகே பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த மின்சார ரெயிலில் அத்துமீறி ஏறிய 15 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

பயணிகள் குற்றச்சாட்டு

தானே மாவட்டம் அம்பர்நாத் ரெயில் நிலையம் அருகே பணிமனையில் நிறுத்தப்பட்டு உள்ள மின்சார ரெயில்களில், அவை புறப்படுவதற்கு முன்பு பல பயணிகள் ஏறி அமர்ந்து வருவதாகவும், இதனால் மற்ற பயணிகளுக்கு இடம் கிடைக்காமல் போவதாகவும் பயணிகள் கடந்த சில நாட்களாக ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்து இருந்தனர். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முன்தினம் பயணிகள் பலர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு சென்று ரெயிலை மறித்த பயணிகளை அப்புறப்படுத்தினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

15 பயணிகள் கைது

இந்த நிலையில் குற்றச்சாட்டு தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று காலை அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 15 பேர் பணிமனையில் நின்ற ரெயில் பெட்டியில் ஏறியதை கண்டனர். இதனை போலீசார் தடுக்க முயன்ற போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போலீசார் அத்துமீறி ரெயிலில் ஏறிய 15 பயணிகளையும் கைது செய்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ரெயில்வே போலீசாரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


1 More update

Next Story